பசுமையான இலைகளை உடைய துத்திக் கீரை பருத்தி இனத்தைத் சார்ந்த ஒரு கீரை வகையாகும். மஞ்சள் நிறத்தில் அழகாக பூக்கும் இதன் இலை, பூ, காய், விதை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் நிறைந்தவை. துத்தியின் இலைகள் இதய வடிவில் இருக்கும். புதர்களாக சாலை ஓரங்களில் வளரும். மூலநோய் கட்டி முளை புழுப்புண்ணும் போகுஞ் சாலவதக் கிக்கட்ட தையலே-மேலும் அதை எப்படியேனும் புசிக்க எப்பிணியுஞ் சாந்தமுரும் இப்படியீற் றுத்தியிலை யை மூலநோய்க்கு மிகச் சிறந்த மருந்து துத்தி, இதன் இலையை வதக்கிக் கட்ட மூல முலைகள் மற்றும் புண்கள் ஆறும் என துத்தியைப் பற்றி பதார்த்த குண சிந்தாமணி பாடலில் சொல்லப்பட்டிருக்கிறது. நம் முன்னோர்கள் துத்திக் கீரையை சமையலில் பயன்படுத்தி வந்தனர். இன்று நாம் வீடுகளில் இக்கீரையை சமைப்பதையே மறந்துவிட்டோம். மலசிக்கலுக்கு துத்தி சிறந்த மருந்து. இன்றைய பரப்பரப்பான வாழ்க்கைச் சூழலில் பலர் மலச்சிக்கலால் துன்ப்படுகின்றனர். மலச்சிக்கல், ஆரோக்கியத்துக்கு முதன்மையான எதிரி. நீடித்த மலச்சிக்கல் நாளடைவில் மூலநோயாக மாறிவிட வாய்ப்புண்டு. நாம் உணவில் பயன்படுத்தும் அதிகமான காரம், புளி...