Skip to main content

மூலம் முதல் மூட்டுவலி வரை துத்தி கீரையின் பயன்

பசுமையான இலைகளை உடைய துத்திக் கீரை பருத்தி இனத்தைத் சார்ந்த ஒரு கீரை வகையாகும். மஞ்சள் நிறத்தில் அழகாக பூக்கும் இதன் இலை, பூ, காய், விதை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் நிறைந்தவை. துத்தியின் இலைகள் இதய வடிவில் இருக்கும். புதர்களாக சாலை ஓரங்களில் வளரும்.

மூலநோய் கட்டி முளை புழுப்புண்ணும் போகுஞ்சாலவதக் கிக்கட்ட தையலே-மேலும் அதைஎப்படியேனும் புசிக்க எப்பிணியுஞ் சாந்தமுரும்இப்படியீற் றுத்தியிலை யை 


மூலநோய்க்கு மிகச் சிறந்த மருந்து துத்தி, இதன் இலையை வதக்கிக் கட்ட மூல முலைகள் மற்றும் புண்கள் ஆறும் என துத்தியைப் பற்றி பதார்த்த குண சிந்தாமணி பாடலில் சொல்லப்பட்டிருக்கிறது. 

நம் முன்னோர்கள் துத்திக் கீரையை சமையலில் பயன்படுத்தி வந்தனர். இன்று நாம் வீடுகளில் இக்கீரையை சமைப்பதையே மறந்துவிட்டோம். மலசிக்கலுக்கு துத்தி சிறந்த மருந்து.

இன்றைய பரப்பரப்பான வாழ்க்கைச் சூழலில் பலர் மலச்சிக்கலால் துன்ப்படுகின்றனர். மலச்சிக்கல், ஆரோக்கியத்துக்கு முதன்மையான எதிரி. நீடித்த மலச்சிக்கல் நாளடைவில் மூலநோயாக மாறிவிட வாய்ப்புண்டு.

நாம் உணவில் பயன்படுத்தும் அதிகமான காரம், புளிப்பு, நார்ச்சத்தற்ற மாவுப் பதார்த்தங்கள் ஜீரனத்தில் சிக்கலை ஏற்படுத்தி வயிற்றில் புண்களை ஏற்படுத்திகிறது. பெருங்குடலில் அதிகம் வாதம் உண்டாகிறது. குடலில் வாதமும், கழிவுகளும் தங்குவதால் மூலத்தில் சூடு ஏற்பட்டு புண்கள் உண்டாகிறது.

துத்தி இலை குடல் புண்களை ஆற்றி மலத்தை இளக்கி வெளியேற்ற உதவுகிறது. துத்திக் கீரையைச் சமைத்துக் சாப்பிடலாம்.

துத்தி இலையை ஆமணக்கு எண்ணெய்யில் வதக்கி மூலத்தில் கட்ட, மூலத்தில் உள்ள வீக்கம், வலி, குத்தல் மற்றும் எரிச்சல் நீங்கும்.

ஆசனவாயில் கடுப்பு மற்றும் எரிச்சலுடன் கூடிய வலி இருக்கும். சமயம் துதிதிக் கீரை ஒரு கைபிடி எடுத்து அதை 100 மி.லி நீரில் கொதிக்க வைத்துச் சிறிது பால், பனங்கற்கண்டு கலந்து பருக வலி குறையும்.
துத்தி இலையை நீரில் கொதிக்க வைத்து வாய் கொப்புளிக்க, பல் ஈறுகளில் ரத்தம் கசிவது நிற்கும்.

அதிகச் சூட்டினால் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுத்தல், சிறுநீரில் எரிச்சல், உடலில் உண்டாகும் கட்டிகளுக்கு துத்தி இலை ஒரு கைபிடி எடுத்து 100 மி.லி நீரில் கொதிக்கவைத்துப் பருகலாம்.

வெப்ப கட்டி மற்றும் மூலத்தில் உண்டாகும் கட்டிகளுக்கு துத்தி இலைச் சாறை அரிசி மாவில் களியாகக் கிண்டி கட்டிகளின் மேல் வைத்துக் கட்டி வந்தால் வெப்பக்கட்டிகள் வெகு விரைவில் குணமாகும்.

உடலில் உள்ள தசைகளுக்கு பலத்தை அளிப்பதால் இதற்கு ‘அதிபலா’ என்ற வேறு பெயரும் உண்டு.

இதன் இலையில் உள்ள தாவரக் கொழுப்பு மற்றும் பல வேதியியல் பொருட்களில் புரதம், மற்றும் வலி நீக்கக்கூடிய பொருட்கள் உள்ளன. பல சித்த மருந்துகளில் துத்தி சேர்க்கபடுகிறது.

வட மாநிலத்தில் உள்ள ஓர் இனத்தை சார்ந்த பழங்குடி மக்கள் துத்தி இலையின் பொடியை கோதுமை மாவுடன் கலந்து ரொட்டியாகத் தயாரித்துச் சாப்பிடுகின்றனர். கருப்பை சார்ந்த நோய்கள் தீர இவ்வாறு தயாரித்துச் சாப்பிடும் பழக்கம் அவர்களிடம் உள்ளது.

பூஞ்சை நோய் காரணமாக தோலில் உண்டாகும் படர்தாமரை நோய்க்கு துத்தி இலையை அரைத்துப் பூச நன்கு குணம் தெரியும்.

மூலநோய் உள்ளவர்கள் துத்திக் கீரையை அடிக்கடி உணவில் பயன்படுத்தி வந்தால் இந்த நோயில் இருந்து விரைவில் விடுதலை அடையலாம்.

Comments

Popular posts from this blog

வெங்காய பூவின் மருத்துவ குணங்கள்

வெங்காயத்தில்   பல   வகையுண்டு .  பெரிய வெங்காயம் ,  சிறிய   வெங்காயம் ,  வெள்ளை வெங்காயம்   ஆகும் .  இந்த   வெங்காயத்தில்   மருத்துவ குணங்கள்   இருப்ப ‍ து   உங்களுக்கு   தெரியும் ஆனால்   வெங்காய   பூ - வில் மருத்துவ   குணம் இருக்கிறது   என்பது உங்களுக்கு   தெரியுமா ? வெங்காயத்தையும்  , வெங்காயப்பூவையும்   சேர்த்து அரைத்து   ஒரு   அவுன்ஸ்   சாறு   எடுத்து   இரவில்   வெறும் வயிற்றில்  48  நாட்கள்   பருகிவர   காசநோய் குணமடையும் . வெங்காயப்பூக்களையும்   வெங்காயத்தையும் ,  பொடியாக   நறுக்கி   தயிரில்   ஊறப்போட்டு   சாப்பிட மூலம்   தொடர்புடைய   எரிச்சல் ,  குத்தல்   குணமடையும் . கண்நோயால்   பாதிக்கப்பட்டு   பார்வை   மங்கலாக இருப்பவர்கள்   வெங்காயப்பூவைக்   கசக்கி   சாறு பிழிந்து   எடுத்து   இரண்டு   சொட்டு   சாறுகாலை ,  மாலை க...

குடலை குணமாக்கும் ஆமணக்கு எண்ணெய்

ஆமணக்கு எண்ணெய் (அ) விளக்கெண்ணெய் : 1. ஆமணக்கு எண்ணெயை பிரசவ வலியைத் தூண்டி பிரசவத்தைத் துரிதப்படுத்த 120மி.லி வரை கர்ப்பிணிப் பெண்களுக்கு கொடுக்கலாம். 2. ஆமணக்கு எண்ணெயை மேற்பூச்சாக பூசிவிடுவதால் மூட்டுவலிகள், தசைபிடிப்பு மற்றும் தசை வலிகள் மற்றும் முதுகு வலிகள் அத்தனையும் அகன்று போகும். 3. மாதவிலக்கு காலத்தின் போது மாதர்கள் அடிவயிற்றுவலி மற்றும் இடுப்பு வலி என்று அவதிப்படும் போது விளக்கெண்ணெயை அடிவயிற்றின் மேல் பூசி வைக்க வலி விரைவில் தணிந்து போகும். 4. நெறி கட்டிகள் ஏற்பட்டு வீக்கமும் மற்றும் வலியும் ஏற்பட்டால் விளக்கெண்ணெயை மேற்பூசி வைக்க ரத்த ஓட்டம் சீர்பட்டு வீக்கமும் வலியும் குறை யும். 5. படுக்க போகும் முன் கண்களைச் சுற்றிலும் சிறிது விளக்கெண்ணெய் விட்டு நன்றாக மசாஜ் செய்து கொண்டால் நன்றாக தூக்கம் வருவதோடு கண்களைச் சுற்றிய கருவளையங்கள் மாறிப் போகும். கண்களுக்கு குளிர்ச்சியும் பார்வைத் தெரிவும் உண்டாகும். 6. 10மி.லி சிற்றாமணக்கு எண்ணெயோடு 5மி.லி தேன் சேர்த்து நன்றாகக் கலந்து உள்ளுக்கு வெறும் வயிற்றில் கொடுக்க வயிற்றுப் போக்கு ஏற்பட்டு வயிறு சுத்தமாகும். பசியி...

ஆலமரத்தின் பயன்கள்

தாவர இயல் பெயர்: Ficus benghalensis இதன் மறு பெயர்கள்: பகுபாத,கசீரி, வனசுபதி, ரக்தபல, நியக்ரோத, சிருங்கி, மகச்சாய வளரும் இடங்கள்: இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் இயற்கையாக வளர்கிறது. பயன் தரும் பகுதிகள்: இலை, பூ, விதை, பழம், பால், பட்டை, விழுது பொதுவான தகவல்கள் : ஆல் அல்லது ஆலமரம் (Ficus benghalensis) விழுதுகளை உடைய ஒரு மரம். இதன் விதைகள் பழம் உண்ணும் பறவைகளால் பரப்பப்படுகின்றன. "ஆல்" பெயர் காரணம்:- மரங்களில் மிகவும் அகலமான மரம் ஆலமரம். அகல் என்னும் சொல் ஆல் என மருவி வழங்கப்படுகிறது. அகன்ற அதன் கிளைகளைத் தாங்குவதற்கு அதன் விழுதுகள் பயன்படுகின்றன. கிளைகளிலிருந்து இவை கீழ்நோக்கி இறங்குவதால் (வீழ்வதால்) இதனை வீழ் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இந்தியாவில் ஆலமரம் இல்லாத கிராமமே பார்க்க இயலாது. அதுவும் ஒவ்வொரு ஆலமரமும் மிகப் பழமையான பாரம்பரிய தொடர்ச்சியும் கொண்டவை. பெரிய மரமாக அடர்ந்து படர்ந்து இருப்பதினால் மட்டுமே ஆலமரத்தடியில் ஊர்க்கூட்டம் நடத்தபடுவதில்லை, மாறாக ஆலமரத்தடியில் சென்று அமர்ந்தாலே அமைதி வந்துவிடும் .தியானம் கூடிவிடும் .இது அனுபவ பூர்வ...