வெங்காயத்தில் பல வகையுண்டு. பெரியவெங்காயம், சிறிய வெங்காயம், வெள்ளைவெங்காயம் ஆகும். இந்த வெங்காயத்தில் மருத்துவகுணங்கள் இருப்பது உங்களுக்கு தெரியும்
ஆனால் வெங்காய பூ-வில்மருத்துவ குணம்இருக்கிறது என்பதுஉங்களுக்கு தெரியுமா?
வெங்காயத்தையும் ,வெங்காயப்பூவையும் சேர்த்துஅரைத்து ஒரு அவுன்ஸ் சாறு எடுத்து இரவில் வெறும்வயிற்றில் 48 நாட்கள் பருகிவர காசநோய்குணமடையும்.
வெங்காயப்பூக்களையும் வெங்காயத்தையும், பொடியாக நறுக்கி தயிரில் ஊறப்போட்டு சாப்பிடமூலம் தொடர்புடைய எரிச்சல், குத்தல் குணமடையும்.
கண்நோயால் பாதிக்கப்பட்டு பார்வை மங்கலாகஇருப்பவர்கள் வெங்காயப்பூவைக் கசக்கி சாறுபிழிந்து எடுத்து இரண்டு சொட்டு சாறுகாலை, மாலைகண்களில் விட்டுவர மூன்று நாட்களில் கண்பார்வைதெளிவடையும்.
பல்வலியால் அவதிப்படுபவர்கள் சம அளவுவெங்காயம் மற்றும் வெங்காயப்பூ எடுத்து அரைத்துசாறுபிழிந்து தினமும் வாய்கொப்பளித்து வரபல்மற்றும் ஈறு தொடர்புடைய நோய்கள் குணமடையும்.
ஒரு கைப்பிடியளவு வெங்காயப்பூ எடுத்துபொடிப்பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டுஅதில் அரைடம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்துசூடேற்றவும். வெங்காயப்பூ நன்றாக வெந்தவுடன்இறக்கி ஆறவைத்து சிறிதளவு உப்பு சேர்த்துஉட்கொள்ள வயிற்று வலி உடன் நிற்கும்.
வெங்காயம் சேர்த்து சமைக்கும் உணவுகளில்வெங்காயத்திற்கு பதிலாக வெங்காயப்பூவையும், வெங்காயத்தாளையும் சிறியதாய் நறுக்கிப் போட்டுசேர்க்கலாம். இதுபசியை தூண்டும். குடலில் உள்ளதேவையற்ற வாயுவை அகற்றும். வெங்காயப்பூவினைஏதாவது ஒரு வகையில் பக்குவம் செய்து சாப்பிடகீழ்வாதம் குணமடையும்.
Comments
Post a Comment