தேன் நெல்லி செய்முறை
தேவையானப் பொருட்கள்:
பெரிய நெல்லிக்காய் - 1/2 கிலோ
வெல்லம் - 1/4 கிலோ
தேன் - 3 ஸ்பூன்
எண்ணெய் - 4 டீஸ்பூன்
செய்முறை:
- பெரிய நெல்லிக்காயை நன்றாகக் கழுவி ஈரம் போக துடைத்துவிட்டு வைக்கவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு குறைந்த தீயில் நெல்லிக்காயை வதக்கவும். நெல்லிக்காய் மாறிச் சுருங்கியதும் அடுப்பை அணைத்துவிடவும். நெல்லிக்காய் ஆறியதும் அதன் மேல் உள்ள எண்ணெயை மெல்லிய பருத்தி துணியால் ஒற்றியெடுக்கவும்.
- அடி கனமான பாத்திரத்தில் வெல்லத்தை நசுக்கிப் போட்டு, 1 கப் தண்ணிர் சேர்த்துக் கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து காய்ச்சவும். கம்பிப்பாகு பதம் வந்ததும் இறக்கிவைத்து, தேன், நெல்லிக்காய்களைச் சேர்க்கவும்.
- இரண்டு நாளில் வெல்லம், நெல்லிக்காயில் நன்றாக ஊறியதும், பல நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி கூடும். இரும்புச் சத்து, இன்னும் பல சத்துக்கள் கிடைக்கும்
Comments
Post a Comment