பூண்டு தேன்
நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளும் வளர்சிதை மாற்றம் அடைந்து தேவையான சத்துகளைக் கொடுத்து விட்டு வெளியேறி விடும் . கல்லீரல் இதற்கு முக்கியம் பங்காற்றுகிறது. சாப்பிடும் உணவுகளில் இருந்து பெறப்படும் கொழுப்புகள் இரண்டு வகைப்படும்.
நல்ல கொழுப்பு:
சில கொழுப்புகள் எங்கும் தேங்காமல் இரத்தத்தில் சேர்த்து பயணிக்கும் இது நல்ல கொழுப்பு ஆகும்.
கெட்ட கொழுப்பு:
சில வகை கொழுப்புகள் உடலில் அங்கங்கு தேங்கும் அவை நகரும் போது மூளை இதயம் சிறு நீரகம் போன்ற உறுப்புகளை சென்றடைந்து அந்த உறுப்புகளில் தேங்கும் போது இதய பாதிப்பு, பக்கவாதம், ரீனல் பெயிலியர் என்ற சிறுநீரக செயலிழப்பு ஆகிய பிரச்சினைகள் ஏற்படலாம்.
கெட்ட கொழுப்பு மூன்று வகையாக கணிக்கப்படுகிறது. அவை இரத்தக் குழாய்களுக்கு மேல் வரும் அதிரோசெலரோசிஸ் ( Atherosclerosis ) த்ராம்போசிஸ் ( Thrombosis ) எம்பாலிசம் ( embolism ) எனப்படும் . இந்த மூன்று வகைக் கொழுப்புகளையும் கரைக்கும் தன்மை பூண்டுக்கும் தேனுக்கு உண்டு.
மரணத்திற்கு ஏதுவான ஆபத்தை உண்டாக்கும் ஐந்து வகையான நோய்கள் கார்டியோ வாஸ்குலர் டிசீஸ் ( Cardiovascular Fisease ( CVD )
உடல் பருமன் ( Obesity ), பக்க வாதம் ( stroke ) , புற்று நோய் ( cancer ) , சிலவகை தொற்றுநோய்கள் (contagious disease ), என வகுத்திருக்கிறார்கள் . இந்த ஐந்து நோய்களுக்கும் தீர்வாக ஒரே ஒரு மருந்து பூண்டு தேன் ஆகும்.
பூண்டு தேன் செய்யும் முறை:
தேவையான அளவு நாட்டுப் பூண்டுகளை உரித்து ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு அவை மூழ்கும் வரை சுத்தமான தேன் ஊற்றி ஒரு வாரம் ஊற வைக்கவும். ஒரு வாரம் தேனில் ஊறிய பின் பூண்டின் சல்பர் வாசனை நீங்கி விடும். காரம் குறைந்து விடும்.
இதை மருந்தாக எடுத்துப் பயன்படுத்தலாம்.
மருந்து சாப்பிடும் முறை:
நோய் உள்ளவர்கள் நாள் தோறும் இரண்டு வேளைகள் வேளைக்கு மூன்று பற்கள் சாப்பிட்டு வரலாம். எந்த நோயும் இல்லாதவர்கள், இரவு படுக்கப் போகும் முன் இரண்டு பற்கள் சாப்பிட்டு வரலாம். தேனையும் சேர்த்து சாப்பிடலாம். அது மட்டுமன்றி பூண்டு தேன் நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட மிக மிக உதவும். சில நோய்களுக்காக வருடக் கணக்காக மருந்து சாப்பிட்டும் எந்த மருந்துக்கும் கட்டுப்படவில்லை என வருந்தி நிற்கும் நோயாளிகளுக்கான சிறந்த மருந்து இந்தப் பூண்டு தேன் ஆகும்.
நன்றி: வீட்டு மருத்துவம்
Comments
Post a Comment