பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும். புண்களை ஆற்ற, தழும்புகளை காணாமல் போகச் செய்யவும் பூசணிக்காய் பயன்படும். பூசணி அடிக்கடி உணவில் சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை தக்கவைக்கும். பூசணிக்காய் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு கண் பார்வை சிறப்பாக இருக்கும். அல்சர் ஜூஸ் செய்முறை: வெண் பூசணியின் வெட்டப்பட்ட அனைத்து பாகங்களான தோல்,விதை உட்பட அனைத்தையும் மிக்ஸியில் அரைத்து அதனுடன் சிறிதளவு தேன் அல்லது சர்க்கரை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் பருகவும் (மேலுள்ள படத்தில் உள்ளவாரு ஒரு கீற்றை மட்டும் அரைக்கவும்) பயன்கள்: ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் உதவும். நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது. அல்சர் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு வெள்ளை பூசணி சாறு உடனடி பலனைத் தரும். அதுமட்டுமின்றி, அதிக காரமான உணவுகள் மற்றும் நீண்ட நேரம் உணவு உட்கொள்ளாம...